முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 03

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 03

ம. பொ. சிவஞானம்

ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 – அக்டோபர் 3, 1995) தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

வாழ்க்கைக் குறிப்பு

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார்.

தமிழரசுக் கழகம்

 • 1945 ஆம் ஆண்டு ம.பொ.சி தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார்.
 • ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார்.
 • இதன் தொடர்ச்சியாக அவர் 1946 ஆம் ஆண்டில் நவம்பர் 21 ஆம் நாள் தமிழ் இளைஞர்கள் அடங்கிய கூட்டமொன்றில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.

போராட்டங்கள்

 • மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார்.
 • மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே‘ என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார்.
 • திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது.

சிறப்புகள்

 • ‘சிலம்புச் செல்வர்’ என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.
 • சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.
 • மதுரைப் பல்கலைக் கழகம் ‘பேரவைச் செல்வர்‘ என்ற பட்டம் வழங்கியது.
 • மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.
 • தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார்.
 • ‘செங்கோல்’ என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!