முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 5

0

சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம்

பிறப்பு : 

  • தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், நவம்பர் 5, 1870 அன்று பிறந்தவர்.

சிறப்புக்கள் :

  • இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.
  • தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்.
  • 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர்.
  • இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார்.
  • இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
  • இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.
  • அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.
  • அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார்.
  • சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.
  • புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.

இறப்பு

  • இவர் ஜூன் 16, 1925 அன்று இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1940 – பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
  • 2007 – ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.
  • 2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.

பிறப்புகள்

விராட் கோலி 

  • பிறப்பு : நவம்பர் 5, 1988
  • ஓர் இந்தியத்துடுப்பாட்டக்காரர். தற்போது இந்தியத் துடுப்பாட்ட அணியின் அணித் தலைவராக உள்ளார். இவர் வலது கை மட்டையாளர் ஆவார்.
  • சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!