முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 28

0
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 28
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 28

ஜோதி ராவ் புலே நினைவு தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 11, 1827ல் மஹாராஷ்ராவில் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி.
 • சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர்.ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.
 • ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர்.1857 சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.
 • 1873ம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்ய சோதக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.
 • 1842ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை.குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863ம் ஆண்டில் நிறுவினார்.
 • 1864ம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது.
 • 1882ம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான ‘ஆண் பெண் பற்றிய ஒப்பீடு’ என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.

இறப்பு:

 • நவம்பர் 28, 1890ல் இறந்தார்(வயது 63).

சிவப்பு கோள் தினம்

By NASA, ESA, and The Hubble Heritage Team (STScI/AURA) [Public domain], via Wikimedia Commons
 • சிவப்பு கோள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 28 அன்று கொண்டாடப்படுகிறது.
 • சிவப்பு கோள் தினம் செவ்வாய் பற்றி அறிய ஒரு வாய்ப்பாகும். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது
 • செவ்வாய் பல வழிகளில் பூமிக்கு ஒத்திருக்கிறது.அதே பருவகால சுழற்சிகளையும் கொண்டு உள்ளது.
 • ஃபோபோஸ் மற்றும் டீமோஸ் என இரண்டு நிலவுகள் உள்ளன.
 • சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயில் உள்ளன.

நிகழ்வுகள்

 • 1814 – லண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.
 • 1893 – நியூசிலாந்தில் முதல் தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
 • 1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
 • 1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை எதிர்த்து நார்வே மக்கள் வாக்களித்தனர்.
 • 2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

பிறப்புகள்

 • 1945 – அமர்கோஸ்வாமி, இந்திய எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.
 • 1901 – எட்வினா மவுண்ட்பேட்டன், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி.
 • 1757 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர்.

இறப்புகள்

 • 1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப் பந்தாட்ட விளையாட்டைக் கண்டுபிடித்த கனடா நாட்டவர்.
 • 1954 – என்ரிக்கோ பெர்மி,நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர்.
 • 2009 – பொ.ம.இராசமணி, தமிழகத் தமிழறிஞர்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here