முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 24

0
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 24
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 24

படி வளர்ச்சி நாள்

  • படிவளர்ச்சி நாள் என்பது உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும்.சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ம் ஆண்டு நவம்பர் 24 அன்று வெளியிட்டார்.
  • நூல் வெளியிடப்பட்ட நாள் படிவளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்த நாளான பிப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
  • 2009ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்டு 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. இது டார்வின் பிறந்த 200வது ஆண்டும் ஆகும்.

அருந்ததி ராய் பிறந்த தினம்

பிறப்பு:

  • சுசானா அருந்ததி ராய் 1961 நவம்பர் 24ல் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார்.
Augustus Binu [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • ஓர் இந்திய எழுத்தாளர்,அரசியல் கட்டுரையாளர்,அணுஆயுத எதிர்ப்பாளர் ஆவார்.
  • இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம்,குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை,அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார்.
  • மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
  • இந்தக் குரல் பல முறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.
  • தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள்,விமர்சனங்கள் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.
  • இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கருப்பு வெள்ளையேன்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்று வருகின்றன.
By jeanbaptisteparis (Flickr: Arundhati Roy) [CC BY-SA 2.0 (https://creativecommons.org/licenses/by-sa/2.0)], via Wikimedia Commons

விருதுகள்:

  • 1997ம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார்.புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2003ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட இருந்த சாகித்ய அகாடமி பரிசை இவர் மறுத்து விட்டார்.
  • மே 2004ல் சிட்னி அமைதிப் பரிசை வென்றார்.
  • 2015ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.

நிகழ்வுகள்

  • 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை கண்டுபிடித்தார்.
  • 1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
  • 1969 – சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!