முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 22

0
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 22
முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் - 22

எம். ஜி. கே. மேனன் நினைவு தினம்

பிறப்பு:

  • ஆகஸ்டு 28, 1928ல் இந்தியாவில் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர். இந்திய விண்வெளித்துறையின் ஆலோசகராகவும், கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல்  நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார்.
  • 1945ல் தோற்றுவிக்கப்பட்ட டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பாபாவுக்குப் பிறகு வளர்த்தெடுத்தவர்.
  • இங்கிலாந்து பிரிசுட்டால் பல்கலைக் கழகத்தில் 1953ல் ஆய்வுப் பட்டம் பெற்ற மேனன் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் செய்தவர்.
  • 1972ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆனார்.
  • 1982- 1989ல்  நடுவணரசு திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
  • இந்தியப் பிரதம அமைச்சருக்கு 1986-89 ஆண்டுகளில் அறிவியல் ஆலோசகராகவும் இருந்தார்.
  • 1989 -90ல் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வித்  துறையின் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார்.
  • 1990-96ல் டெல்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

விருதுகள்:

  • பத்மஸ்ரீ விருது-1961
  • பத்ம பூசண் விருது-1968
  • பத்ம விபூசண் விருது-1985
  • ராயல் சொசைட்டி பெல்லோ-1970
  • 2008ம் ஆண்டில் எம்.ஜி.கே.மேனனை கௌரவிக்கும் வகையில் நூண்கோள் ஒன்றுக்கு 7564கோகுமேனன் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இறப்பு:

  • நவம்பர் 22, 2016ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது.இவ்விமானம் நவம்பர் 29ல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.
  • 2005 – ஜெர்மனியின் முதலாவது பெண் அதிபராக ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
  • 2005 – எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
  • 2007 – இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.

பிறப்புகள்

  • 1830 – ஜல்காரிபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்.
  • 1904 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் இயற்பியலாளர்.
  • 1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப்,பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவர்.

இறப்புகள்

  • 1774 – ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி.
  • 1963 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர்.
  • 1967 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!