முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 1

0

புனிதர் அனைவர் பெருவிழா

  • புனிதர் அனைவர் பெருவிழா (All Saints’ Day அல்லது Solemnity of All Saints) என்பது கத்தோலிக்க திருச்சபை முதலிய பல மேற்கு கிறித்தவ திருச்சபைகளில் நவம்பர் 1 அன்றும் கிழக்கு திருச்சபைகளில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.

  • பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள் எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரேகோரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும் இவ்வகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

நிகழ்வுகள்

  • 1928 – துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துமுறை இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.
  • 1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
  • 1956 – இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.
  • 1957 – அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மெக்கினா பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
  • 1973 – மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • 2006 – பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!