முக்கியமான நிகழ்வுகள் மே-30

0
சுந்தர ராமசாமி பிறந்த தினம்

பிறப்பு:

 • மே 30, 1931ல் தமிழ்நாட்டிலுள்ள  நாகர்கோவிலில் பிறந்தார்.

சிறப்புகள்:

 • நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.
 • இவர் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.
 • பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.
 • தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.
 • 1953ம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

படைப்புகள்:

 • ஒரு புளியமரத்தின் கதை (1966)
 • சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
 • காற்றில் கரைந்த பேரோசை
 • இதம் தந்த வரிகள் (2002)
 • புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
 • வாழும் கணங்கள் (2005)

விருதுகள்:

 • குமரன் ஆசான் நினைவு விருது
 • இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001ல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.
 • கதா சூடாமணி விருது (2004)
 • தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
 • சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது.

இறப்பு:

 • அக்டோபர் 14, 2005ல் இறந்தார்.
அலெக்ஸி லியோனோவ் பிறந்த தினம்

பிறப்பு:

 • மே 30, 1934ல் ரஷ்யாவில் பிறந்தார்.
By NASA [Public domain], via Wikimedia Commons

சிறப்புகள்:

 • சோவியத்/ரஷ்யாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரர்.
 • சோவியத் வான்படையின் ஜெனரலும் போர் விமானியும் ஆவார்.
 • இவர் மார்ச் 18, 1965ல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளி வந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
 • ஆர்தர் சி. கிளார்க் தனது 2010: ஒடிசி இரண்டு நூலை லியோனவ் மற்றும் அந்திரேய் சாகரவ் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.
 • அலெக்சேய் லியோனவ் 1965லும் 1975லும் இரண்டு முறை சோவியத் ஒன்றியத்தின் நாயகர் (hero) என்ற விருதைப் பெற்றார்.
 • லெனின் விருது பெற்றவர்.

விண்பயண நேரம்: 7நாள் 00மணி 32நிமிடம்

பிரிவு: வான்படை முதலாம் பிரிவு

பயணங்கள்: வஸ்கோத் 2, சோயூஸ் 19

வில்பர் ரைட் நினைவு தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 16, 1867ல் பிறந்தார்.
[Public domain], via Wikimedia Commons

சிறப்புகள்:

 • வில்பர் ரைட் மற்றும் அவரின் சகோதரர் ஓர்வில் ரைட்டும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள்.
 •  விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகள் ஆவார்கள்.
 • வில்பர் ரைட், ஓர்வில் ரைட் இருவரும் ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படுகின்றன.
 • முதன்முதலில் டிசம்பர் 17, 1903ம் ஆண்டில் 12வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள்.

இறப்பு:

 • மே 30 1912ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here