முக்கியமான நிகழ்வுகள் மே-3

0

முக்கியமான நிகழ்வுகள் மே-3

உலக பத்திரிகை சுதந்திர தினம்

 • பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 • 1993ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ம் தேதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 • மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
 • அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் 

பிறப்பு:

 • மே 3, 1935 ல் பிறந்தார்.

இயற்பெயர்: ரங்கராஜன்.

சிறப்பு:

 • தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.
 • சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.
 • இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
 • இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது.தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார்.

சில புத்தகங்கள்:

 • ஆயிரத்தில் இருவர்
 • ப்ரியா
 • நைலான் கயிறு
 • ஒரு நடுப்பகல் மரணம்
 • மூன்று நிமிஷம் கணேஷ்
 • காயத்ரி

விருதுகள்:

 • தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
 • வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
 • சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
 • தூர்தர்ஷன் சிறந்த தொடர் “மஹான் ராமானுஜார்” க்கான மைலாப்பூர் அகாடமி விருது.
 • 1999 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட சினிமா கலைமண்டலம் சிறந்த எழுத்தாளர் விருது.
 • சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது – பாண்டவர் பூமி (2001)

இறப்பு:

 • பிப்ரவரி27,2008 ல் இறந்தார்.

சாகீர் உசேன் நினைவு தினம் 

பிறப்பு:

 • பிப்ரவரி 8, 1897 ல் பிறந்தார்.

சிறப்பு:

 •  இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார்.
 • 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
 • இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார்.

விருதுகள்:

 • இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது.
 • 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது.
 • டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

இறப்பு:

 • 3 மே 1969ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here