முக்கியமான நிகழ்வுகள் மே-29

0

முக்கியமான நிகழ்வுகள் மே-29

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்
  • ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும் நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும் அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது.
  • ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும் சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ம் ஆண்டு முதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
சரண் சிங் நினைவு தினம்

பிறப்பு:

  • 23 டிசம்பர் 1902ல் பிறந்தார்.
By Ashutosh Teotia [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சிறப்புகள் :

  • இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக 28 ஜூலை 1979 முதல் 14 ஜனவரி 1980 வரை பணியாற்றினார்.
  • குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.
  • இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.
  • பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சரண் சிங் தொடர்ந்து மகாத்மா காந்தியின் தலைமையில் ஈடுபட்டு பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1930ல் அவர் உப்பு சட்டங்களை மீறியதன் மூலம் 6 மாதங்கள் சிறையில் அனுப்பப்பட்டார்.
  • அவர் தனிநபர் சத்யாகிரகம் செய்ததன் பொருட்டு நவம்பர் 1940ல் ஒரு வருடம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1942 ஆகஸ்ட் மாதம் DIR கீழ் பிரிட்டிஷ் சட்டத்தின் மூலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இறப்பு:

  • 29 மே 1987ல் இறந்தார்.
ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 29, 1917 ல் பிறந்தார்.
By White House Press Office (WHPO) (John F. Kennedy Presidential Library and Museum) [Public domain], via Wikimedia Commons

சிறப்புகள் :

  • ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை இருந்தவர்.
  • இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார்.
  • மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார்.
  • புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் ஆவார்.
  • இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.

இறப்பு:

  •  நவம்பர் 22, 1963ல் டெக்சாஸின் டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டு இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!