4.5 C
New York
Sunday, July 5, 2020
Home நடப்பு நிகழ்வுகள் முக்கிய நாட்கள் முக்கியமான நிகழ்வுகள் மே-28

முக்கியமான நிகழ்வுகள் மே-28

உலக பட்டினி தினம்

 • ஐ.நா சபை மூலம் மே 28ல் உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது.
 • ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர்.ஆசியா,மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் அதிக அளவில் பட்டினி சாவை எதிர்கொள்கின்றன.
 • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா 63-வது இடத்தில் உள்ளது.
 • சீனாவை பொறுத்த வரையி்ல் 1990-ல் 13 புள்ளிகளை பெற்றிருந்தது. இவை 2013ல் 5.5 ஆக குறைத்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியா 32.6ல் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளதுஎன தெரிவித்து்ள்ளது.

By Sophie abasa [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

 • கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி  அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது.
 • இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப  சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 • ஒரு மனிதனின் வயது, பாலினம், உடலமைப்பு, செயல்பாடுகள் வாழுமிடத்தைப் பொறுத்து உணவின் அளவு மாறும்.
 • ஐ.நாவின் கணக்கின் படி ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது.

என்.டி.ராமராவ் பிறந்த தினம்

பிறப்பு:

 • மே 28, 1923ல் பிறந்தார்.

இயற்பெயர்:நன்டமுரி தாரக ராம ராவ்.

By Film produced by Vijaya Productions. Video published by Shalimar Telugu & Hindi Movies. (YouTube) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி.
 • தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.
 • தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

இறப்பு:

 • ஜனவரி 18,1996ல் இறந்தார்.

டி.எம் தியாகராஜன் பிறந்த தினம்

பிறப்பு:

 • மே 28, 1923ல் தஞ்சாவூரில் பிறந்தார்.

சிறப்பு:

 • தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கர்நாடக இசைக் கலைஞர்.
 • சென்னையிலுள்ள தமிழ் நாடு அரசு இசைக் கல்லூரியில் ஆசிரியராகவும் உதவித் தலைவராகவும் பணியாற்றி 1981ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
 • பின்னர் சென்னை மியூசிக் அகாதமி நடத்திய இசை ஆசிரியர்களுக்கான கல்லூரியின் தலைவராக பணியாற்றினார்.

விருதுகள்:

 • தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைமாமணி விருது வழங்கியது.
 •  1981ல் சென்னை,மியூசிக் அகாதமி சங்கீத கலாநிதி விருது வழங்கியது.
 • 1982ல் சங்கீத நாடக அகாதமி சங்கீத நாடக அகாதமி விருது வழங்கியது.
 • 1988ல் மைசூர் ஃபைன் ஆர்ட்ஸ் சங்கீத கலா நிபுணா விருது வழங்கியது.
 • 1974ல் சென்னை ஸ்ரீ கிருஷ்ண சபா சங்கீத சூடாமணி விருது வழங்கியது.

இறப்பு:

 • ஜூன் 27, 2007ல் இறந்தார்.

மாதவிடாய் சுகாதார நாள்

 • ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28ம் நாளன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும்.
 • மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
 • 2014ல் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான வாஷ் யுனைட்டெட் (WASH United) தொடங்கப்பட்டு 270க்கும் மேற்பட்ட உலகளாவிய ஒத்த அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-05

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு:  ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...

யுஜிசி வேலைவாய்ப்பு 2020

யுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 அரியநாயகிபுர இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...