முக்கியமான நிகழ்வுகள் மே-23

0

முக்கியமான நிகழ்வுகள் மே-23

கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்

பிறப்பு:

 • மே 23, 1707ல் பிறந்தார்.
[Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர்.
 • இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர்.
 • தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
 • இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
 • ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை லின்னேயஸ் எழுதினார். அதன் பின் தாவர, விலங்குகளுக்கு இரு பெயரீடு முறை குறித்து ஆராய்ந்தார்.

வகைப்பாட்டியல்:

உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:

 1. திணை(இராச்சியம்) (kingdom)
 2. வகுப்பு (class)
 3. வரிசை (order)
 4. பேரினம் (genus)
 5. இனம் (species)
 • இவர் உயிரினங்களை பிளாண்டே (plantae – தாவரங்கள்), அனிமேலியா (animalia – விலங்குகள்) என இரு திணைகளாகப் பகுத்தார். இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

முக்கிய நூல்கள்:

 • இயற்கையின் அமைப்பு(Systema Naturae)
 • உயிரினங்களின் வகைப்பாடு
 • இன வகைப்பாடு
 • தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு(Philosophia Botanica)

நினைவுச் சின்னங்கள்:

 • லின்னேயஸின் உருவம் பொதிந்த பல சுவீடிய அஞ்சல் தலைகள் மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
 • உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லின்னேயசுக்கு ஏராளமான சிலைகள் உள்ளன.
 • 1888 முதல் லண்டன் லின்னியன் சங்கத்தின் சார்பில் தாவரவியல் அல்லது விலங்கியலில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு லின்னியன் பதக்கம் வழங்கப்பட்டது.
 • வாக்‌ஷொ பல்கலைக்கழகம் மற்றும் கால்மர் கல்லூரிகளை இணைத்து லின்னேயஸ் பல்கலைக்கழகம் ஆகச் சுவீடன் பாராளுமன்றம் மூலம் 1 ஜனவரி 2010 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • மேலும் இரட்டைப்பூ பேரினம் (லின்னெயா; Linnaea), நிலவு பள்ளம் (லின்னெ; Linné) மற்றும் கோபால்ட் சல்பைட்டு தாது (லின்னைட்; Linnaeite) ஆகியவைக்கு லின்னேயஸ் என்று பெயரிடப்பட்டது.

இறப்பு:

 • ஜனவரி 10, 1778ல் இறந்தார்.
சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்
 • வளரும் நாடுகளில் சுமார் 2 – 3.5 மில்லியன் பெண்கள் மகப்பேறு ஃபிஸ்துலாவுடன் வாழ்கின்றனர்.
 • ஆண்டிற்கு ஐம்பதாயிரம்முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர். இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
 • ஆகவே இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003ல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
 • ஐ.நா. சபையும் மே 23ஐ மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.
 • 2019 Theme: “Leaving no one behind: Let us commit to ending fisula now!”
உலக ஆமைகள் தினம்
By Brocken Inaglory [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html) or CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons
 • 1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர்.
 • விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர் 2000ஆம் ஆண்டிலிருந்து ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள்.
 • 1972ம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது.
 • மாணவர் கடலாமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது 1971ம் ஆண்டு ரோமுலஸ் வித்தேகர் மற்றும் வள்ளியப்பனால் தொடங்கப்பட்டது.
 • ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும்.இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
 • சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது.
 • இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
By U.S. Fish and Wildlife Service Southeast Region [CC BY 2.0 (https://creativecommons.org/licenses/by/2.0) or Public domain], via Wikimedia Commons

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!