முக்கியமான நிகழ்வுகள் மே-22

0

முக்கியமான நிகழ்வுகள் மே-22

உலக கோத் தினம்
  • உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது.
  • கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினர்.
  • ஒவ்வொரு வருடமும் மே 22ல் இந்த நிகழ்வை நடத்துவது என முடிவு செய்தனர்.
  • இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலக பல்லுயிர் பெருக்க தினம்
  • மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு.
  • பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை.
  • உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22ல் கொண்டாடப்படுகிறது.
  • உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • 2019 Theme: ‘Our Biodiversity, Our Food, Our Health’.
ராஜாராம் மோகன் ராய் பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 22, 1772ல் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜா ராம் மோகன் ராய்.
  • இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய சமூக ஏற்றத் தாழ்வுகள், முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார்.
  • இந்தியாவின் விடிவெள்ளி என்றும்,இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர்.
  • பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். பிரம்மசமாஜம் கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.
  • பெண்களுக்கு கட்டாயக் கல்வி முறையை பெரிதும் ஆதரித்தார்.
  • உடன்கட்டை ஏறல் (சதி) என்ற கொடுமையை ஒழிக்க பாடுபட்டார். இதனால் 1833ல் ஆட்சியிலிருந்த லார்ட் வில்லியம் பென்டிக் ஒரு சட்டம் இயற்றி அதன் மூலம் சதி முறையை ஒழித்தார்.
  • இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், இபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும்.
  • இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார்.
  • கி.பி. 1815ல் கல்கத்தாவில் ஆத்மிக சபை என்பதை நிறுவினார்.இதில் நடுத்தர, கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர்.
  • 1819ல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியிட்டார்.
  • பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார்.
  • 1820ல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டார்.
  • சாதி அமைப்பு, குழந்தை திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போரட்டங்கள் நடத்தினார்.

இறப்பு:

  • செப்டம்பர் 27, 1833ல் இறந்தார்( 61 வயது).

முக்கிய நிகழ்வுகள்

  • 1906ம் ஆண்டு மே 22ம் தேதி ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
  • 1990ம் ஆண்டு மே 22ஆம் தேதி விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!