உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்
- கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது.
- ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.
- ஐ.நா. பொதுச்சபை 2001ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
- அதன்மூலம் மே 21ஐ உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.
- 2019 Theme: “Do One Thing for Diversity and Inclusion”
தீவிரவாத எதிர்ப்புத் தினம்
- இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21 அன்று கொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- தீவிரவாதம் என்னும் சவாலை அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்கொள்வதையும், நாகரீக மற்றும் ஜனநாயக வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்கவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
- ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிகளுக்கு புறம்பாக ஒரு தனிப்பட்ட மனிதன் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உயிர், உடைமைகள், கண்ணியம் அல்லது நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றை பறிக்கும் எந்த ஒரு செயலும் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் ஆகும்.
- ஒரு அரசினை எதிர்ப்பவர்களை ராணுவம், காவல்துறை மற்றும் உளவுத்துறை மூலமாக கொல்வது, சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது போன்றவையும் பயங்கரவாதத்தின் ஒரு அங்கமே.
- இவை அரசு பயங்கரவாதம் என்று அழைக்கப்படும்.
ராஜீவ் காந்தி நினைவு தினம்
பிறப்பு:
- ஆகஸ்ட் 20, 1944 ல் பிறந்தார்.

சிறப்பு:
- ராஜீவ் காந்தி தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட பின் 6வது இந்தியப் பிரதமரானவர்.
- இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல் மீது ஆர்வமில்லாது விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
- தம்பி சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த பின்னர் 1981 பிப்ரவரியில் சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு,20ஐ இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
- இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார்.

அரசியல் கட்சி: காங்கிரஸ்
இறப்பு:
- 21 மே 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
மேரி அன்னிங் பிறந்த தினம்
பிறப்பு:
- 1799 மே 21ல் பிறந்தார்.

சிறப்பு:
- இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்.
- 1823ல் முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்தார்.
- பறக்கும் ஊர்வன வகை டிராகான் எலும்பை 1828ல் கண்டெடுத்தார்.
- அடுத்த ஆண்டில் ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்தார்.
- மேரியை கவுரவ உறுப்பினராக டார்செட் கவுன்ட்டி மியூசியம் அங்கீகரித்தது.
இறப்பு:
- 1847 மார்ச் 21ல் இறந்தார்(வயது 48).
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்