முக்கியமான நிகழ்வுகள் மே-19

1

முக்கியமான நிகழ்வுகள் மே-19

பி.சுந்தரய்யா நினைவு தினம்

பிறப்பு:

  • 1 மே 1913ல் பிறந்தார்.
By Sivahari [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • விடுதலை போராட்ட வீரர். இந்திய பொதுவுடமை (மார்க்சிஸ்டு) கட்சியின் நிறுவன உறுப்பினரும்,தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தின் தலைவர்களுள் ஒருவர்.
  • பி. எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்டார்.
  • 1932ம் ஆண்டு உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று தஞ்சாவூர் சிறுவர் சிறை, திருச்சி மற்றும் இராஜமகேந்திரபுரம் சிறைகளில் தண்டனைக் காலத்தை கழித்தார்.
  • 1933-1934ம் ஆண்டுகளில் தென்னியதியாவில் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்க வந்த தோழர் அமீர் ஹைதர்கானின் தொடர்பால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார்.
  • பின்னர் 1934ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார்.
  • 1952ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரய்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 1955ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஆந்திர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரய்யா சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1936ல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.அப்போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • “தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் குறித்த முழுமையான நூலாகும்.

இறப்பு:

  • 19 மே 1985ல் இறந்தார்.

உலகக் குடும்ப மருத்துவர் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் மே 19ம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்குக் குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும் சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு – WONCA) 2010ல் முதன் முதலாக இந்நாளை அறிவித்தது.
  • அனைத்து நோயாளிகளுக்கும் தனிப்பட்ட, விரிவான மற்றும் தொடர் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் மருத்துவர்களுக்கு இருக்கும் திறனின் மையப் பங்கை அங்கீகரிக்க இந்நாள் ஓர் அற்புதமான வாய்ப்பாகும்.

இந்நாளைக் கொண்டாடுவதின் நோக்கம்:

  • உலக அளவில் குடும்ப மருத்துவர்களின் பணியைக் கவனத்தில் கொண்டு வருவது.
  • குடும்ப மருத்துவர்களை அங்கீகரிப்பது.
  • குடும்ப மருத்துவர்களின் மனத்திண்மையை வலிமைப்படுத்துவது.
  • குடும்ப மருத்துவர்களோடு தொடர்புடைய முக்கியப் பிரச்சினைகளையும், உலகம் முழுவதும் சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணியாற்றுவதையும் முக்கியத்துவத்துக்குக் கொண்டுவருதல்.
  • 2019 Theme:  “Family doctors – caring for you for the whole of your life”

ஜானகி இராமச்சந்திரன் நினைவு தினம்

பிறப்பு:

  • நவம்பர் 30, 1923ல் பிறந்தார்.
By Ruwanwiki [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்.
  • வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை.
  • பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.
  • M.G.R 1987 டிசம்பர் 24ம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி 1988 ஜனவரி 7ம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 ஜனவரி 30ம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.

இறப்பு:

  • மே 19, 1996ல் இறந்தார்(வயது 73).

நீலம் சஞ்சீவ் ரெட்டி பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 19, 1913ல் பிறந்தார்.
By Jayanth n at English Wikipedia [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
  • இவர் 1977ல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார்.
  • இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார்.
  • 1956ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார்.பின் 1962-1964ம் முதலமைச்சராக இருந்தார்.
  • கூட்டுச்சேரா இயக்கத்தின் செயலாளர்.
  • மக்களவையின் 4வது அவைத்தலைவர்.

அரசியல் கட்சி:ஜனதா கட்சி (1977 முதல்)

இறப்பு:

  • ஜூன் 1, 1996ல் இறந்தார் .

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!