முக்கியமான நிகழ்வுகள் மே-18

0

சர்வதேச அருங்காட்சியக தினம்

  • 1978ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது.
  • அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன.
  • உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன.
  • அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள “தி கிங் சென்டர்’ என்ற மியூசியம், உலகில் உள்ள மியூசியங்களிலேயே தலைசிறந்த மியூசியமாக கருதப்படுகிறது.
  • 2019 Theme: Museums as Cultural Hubs: The Future of Tradition.

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

  • எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான அவசரத் தேவையாக உள்ளது.
  • இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிப்பதன்மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும்.
  • இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய நாள்

  • இந்திரா காந்தி இந்திய பிரதமராக இருந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் 1974ம் ஆண்டு மே 18 அன்று இந்திய ராணுவம் முதன்முறையாக அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • இந்த சோதனை சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்ற குறியீடு மூலம் அழைக்கப்படுகிறது.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள 5 நாடுகளுக்கு அடுத்தப்படியாக இத்தகைய சோதனையை இந்தியா நடத்தியது.இதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலில் 6ஆவது நாடாக இந்தியாவும் இணைந்தது.
  • இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின்பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு 8 கிலோ டன்கள் டி.என்.டி. வெடிபொருள் வெடிப்புக்குச் சமானம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஹெச். டி. தேவ கௌடா பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 18,1933ல் பிறந்தார்.
By raghu kumar (my computer) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர்.
  • 1962ம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1999ல் ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்றளவும் உள்ளார்.

அரசியல் கட்சி:ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

பயிர் பாதுகாப்பு நாள்

By AMALAN619 [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons
  • பூச்சிகள், நோய்கள் திடீரென தாக்குவதால் பயிர்கள் அழிந்துவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
  • இந்திய அரசால் 1914ம் ஆண்டில் பூச்சி தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • இதனால் அயல் நாடுகளிலிருந்து பூச்சி மற்றும் நோய்கள் பரவுவது தடை செய்யப்பட்டது.
  • குவாரன்டைன் சட்டம்– விவசாயம் சம்பந்தப்பட்ட விளைபொருட்களை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலமும் அல்லது ஒரு சில காலம் பிரித்து வைப்பதன்மூலமும் பூச்சிகள், நோய்கள், களைகள் முன்பு இல்லாத இடங்களில் புகுவது தடைசெய்யப்படுகிறது.இதற்கு குவான்டைன் சட்டம் என்று பெயர்.
  • குவான்டைன் சட்டமானது மத்திய மாநில அரசாங்கங்களின் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
  • இத்தடுப்புச் சட்டமானது ஆகாய மார்க்கம், நிலமார்க்கம், கடல் மார்க்க நுழைவாயில்களில் செயல்பட்டு வருகிறது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!