முக்கியமான நிகழ்வுகள் மே-17

0

உலக தொலைத்தொடர்பு தினம்

  • உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
  • இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.
  • உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.
  • 2019 Theme: Bridging the standardization gap

உலக உயர் இரத்த அழுத்த தினம்

  • உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக மற்றும் அறிவித்திருக்கிறது.
  • ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம்.
  • இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம்.
  • இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2019 Theme: Know Your Numbers

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள்:

  1. பக்கவாதம்
  2. பார்வை பறிபோகுதல்
  3. சிறுநீரக செயலிழப்பு
  4. இதய நோய் மற்றும் மாரடைப்பு

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில வழிகள்:

  1. உணவில் உப்பு குறைத்துக் கொள்ள வேண்டும் .
  2. பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
  3. உடற்பயிற்சி
  4. மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும்
  5. புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால் இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
  6. தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இயக்கம் அமைப்பு உருவான நாள்

  • திருமுருகன் காந்தி தமிழ்நாடு தேசத்தை சேர்ந்த தமிழ்த்தேசியவாதி மற்றும் பெரியாரிய சமூக சீர்த்திருத்தவாதி ஆவார்.
  • இவர் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பான மே 17 இயக்கம் என்கிற அமைப்பை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக உருவாக்கினார்.
  • திருமுருகன் காந்தி தமிழீழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக் குறித்த மே 17 இயக்கத்‌தின் கருத்துக்கள், செயற்பாடுகள் குறித்து 2012ம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் நடந்த ஒரு பேரணியில் விளக்கியிருந்தார்.
  • இவர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து அது சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருந்துள்ளார்.
  • இவர் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து ஐ.நா சபையில் பேசியிருக்கிறார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!