முக்கியமான நிகழ்வுகள் மே-16

0

ஈலியா மெக்னிகாவ் பிறந்த தினம்

பிறப்பு:

 • மே 16,1845ல் பிறந்தார்.

சிறப்பு:

 • நோபல் பெற்ற ரஷ்ய விலங்கியலாளர்.
 • நோய் எதிர்ப்பு சக்தி துறையின் தந்தை.
 • 17 வயதில் கார்கோஃப் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியலில் சேர்ந்தார்.4 ஆண்டு படிப்பை இரண்டே ஆண்டுகளில் முடித்தார்.
 • முதல் ஆண்டிலேயே ஒருசெல் உயிரினங்கள் குறித்த தனது முதல் அறிவியல் கட்டுரையை வெளியிட்டார்.
 • பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
 • காட்டிங்கன், கீஸன் பல்கலைக்கழகங்கள், மூனிச் அகாடமி ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்தார்.
 • மூப்பியல் (ஜெரன்டாலஜி) என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்.
 • நூற்புழுக்கள் குறித்தும், தட்டைப் புழுக்களின் செல்லக செரிமானம் குறித்தும் ஆராய்ந்தார்.
 • உயிரினங்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பதைக் கண்டறிந்தார்.
 • இதுகுறித்து பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இதற்காக இவருக்கு 1908-ல் பால் எர்லிச் என்பவருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இறப்பு:

 • 1916ல் இறந்தார்(வயது 71).

சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தினம் 

 • சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும்.
 • தனி நாடாக விளங்கிய சிக்கிம் 1975ம் ஆண்டு மே 16ம் தேதி மக்கள் வாக்கெடுப்பின் மூலமாக  இந்தியாவின் 22வது மாநிலமாக இணைந்தது.
 • சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி ஆகும்.

முக்கிய நிகழ்வுகள்

 • 1932 மே 16ம் தேதி அன்று பம்பாயில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
 • 1960 மே 16ம் தேதி கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
 • 1975 மே 16ம் தேதி ஜூன்கோ டபெய் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
 • ரஷ்ய நாட்டு நுண்ணுயிரியல் விஞ்ஞானி இல்யா இல்யிச் மெச்னிகோவ் 1845 மே 16ம் தேதி பிறந்தார்.
 • 1929 மே 16ம் தேதி முதலாவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here