முக்கியமான நிகழ்வுகள் மே-15

0

சர்வதேச குடும்ப தினம்

 • குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வலியுறுத்தி 1992ம் ஆண்டு மே 15 முதல் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
 • ஒரு மனிதன் எந்த சூழ்நிலையிலும் எந்த வயதினிலும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது.
 • குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்ப்பதுவும்,  வீட்டுப் பொறுப்புக்கள்,  தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
 • இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005ல் கொண்டு வரப்பட்டுள்ளது.

பியரி கியூரி பிறந்த தினம்

பிறப்பு:

 • 15 மே 1859 ல் பிறந்தார்.
By Dujardin [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • பிரெஞ்சு இயற்பியலாளர்.
 • அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர்.
 • கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்பபடும்.

விருது:

 • 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டவர்.
 • 1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய ஆய்வுக்காக தாவி விருது வழங்கப்பட்டது.

கண்டுபிடிப்புகள்:

 • காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக  ‘முறுக்குத் தராசு’ (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார்.
 • பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது.
 • படிக மின் அழுத்தமானியை  உருவாக்கினார்.
 • காந்தப் புலங்களைப் பயன்படுத்தி வெளியேறிய துகள்களான ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்களை கண்டறிந்தவர்.

இறப்பு:

 • 19 ஏப்ரல் 1906 ல் காலமானார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here