முக்கியமான நிகழ்வுகள் மே-12

0

முக்கியமான நிகழ்வுகள் மே-12

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் 

பிறப்பு:

  • மே 12, 1895–ல் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர்.
  • உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர்.
  • பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்.சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர் இவரது இளம் வயதிலேயே அப்போதைய தியோசபிகல் சொசைட்டி அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு எதிர்கால தியொசபில் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
  • எனினும் பின்னர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவ்வியக்கத்தைத் துறந்து தன்னிச்சையான கொள்கை கொண்டார்.
  • அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.

இறப்பு:

  • பிப்ரவரி 17, 1986ல் இறந்தார்.

உலக செவிலியர் தினம்

  • உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகள் அனைத்திலும் மே 12ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974ம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
  • ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவர் 1820ம் ஆண்டு மே 12 இல் பிறந்தார். இவர் மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை புரிந்தார்.
  • இவரின் மருத்துவ சேவையை கௌரவிக்கும் வகையில் இவர் பிறந்த தினமான மே 12 சர்வதேச செவிலியர் தினமாக 1965ம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 12, 1820ல் பிறந்தார்.
See page for author [CC BY 4.0 (https://creativecommons.org/licenses/by/4.0)], via Wikimedia Commons

சிறப்பு:

  • நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து செவிலியர்.
  • இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.
  • போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர்.செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார்.
  • விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.
  • உலகத் செவிலியர் தினம் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.
By not listed [Public domain], via Wikimedia Commons
  • கே எல் ஏம் (KLM) விமான நிறுவனம் தங்கள் எம் டி (MD)-11 விமானமொன்றிற்கு ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை வைத்திருக்கிறது.
  • இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன.
  • ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ்சார் மருத்துவமனை)தாதியியலில் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு ‘பெட்சைட் ப்ளோரன்ஸ்’ (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.
  • நாட்டின் சிறந்த நர்சுகளுக்கு “ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்’ தங்க விருது வழங்கப்படுகிறது.

இறப்பு:

  • ஆகஸ்ட் 13, 1910ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!