முக்கியமான நிகழ்வுகள் மே-10

0

முக்கியமான நிகழ்வுகள் மே-10

உலக வலசை போதல் தினம்

  • உலக வலசை போதல் தினம் மே 10ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • வலசை போதல் (Animal migration) என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும்.
  • எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன.
Bird
By Chinmayisk [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons
  • பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.
  • வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்

  • உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் (World Lupus Day) ஆண்டு தோறும் மே 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும் எலும்புகளையும் தாக்குகிறது.
  • தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமி தொற்று, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.
  • ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
  • தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

உலக அன்னையர் தினம்

  • அன்னையர் தினம் நாடெங்கும் மே மாதம் 13ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் தேசிய அன்னையர் தினம் ஆகஸ்ட் 19ந் தேதி கொண்டாடப்படுகின்றது.
  • ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் அன்னையர் தினம் மே 2வது ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்படுகின்றது.
  • அன்னா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் 1914ம் ஆண்டில் அன்னையர் தினத்தை அறிவித்தார்.
  • அன்னா ஜார்விஸ் தனது அம்மாவின் மீது கொண்ட அன்பின் காரணமாக குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டார்.
  • இதற்காக ”மதர்ஸ் டே ஒர்க் கிளப்” (Mothers’ Day Work Clubs) என்ற அமைப்பை உருவாக்கி அதன் வாயிலாக தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி கற்பிப்பது போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து வந்தார்.
  • தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே அன்னையர் தினத்தின் நோக்கமாகும்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!