முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 14

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 14

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த நாள்

  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மார்ச் 14, 1879 அன்று பிறந்தவர்.
  • இவர் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.
  • இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.
  • இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

சிறப்புகள்

  • ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), “இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

வெளி இணைப்புகள்

  • E=mc2 மற்றும் தொடர்பியல்
  • ன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாடு நமது சூரியனின் இயக்கத்தைப் பற்றியும், அதனுள் நடக்கும் அணுக்கரு பிணைப்பில் நிறை உருமாறி வெளிப்படும் பேரளவு ஆற்றலை விளக்க உதவுகிறது.
  • நட்சத்திரங்களின் தோற்றத்தையும், வாழ்வையும், மறைவையும், பிரபஞ்சம் தோன்றியதையும், இயங்குவதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

  •  இறப்பு: ஏப்ரல் 18, 1955

பை நாள்

  • பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன பை (π) என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது.

  • அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக பை (π)ஐயும் குறிக்கும்.
  • இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).
  • பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22இல் பை (π) யின் பரவலாக அறிந்த அண்ணளவு இது கொண்டாடப்பட்டு வருகின்றது. 
  • பை(π) நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது.
  • லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!