முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 01

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 01

விடுதலை போராட்ட வீரர் ஏ. ஏன். சிவராமன்

பிறப்பு: மார்ச் 1, 1904

 

  • ஆம்பூர் நாணுவையர் சிவராமன் என்ற ஏ. என். சிவராமன் (மார்ச் 1, 1904 – மார்ச் 1, 2001) தமிழகத்தைச்சேர்ந்த பத்திரிகையாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். தினமணி பத்திரிகையின் ஆசிரியராக 54 ஆண்டுகள் பணியாற்றியவர்.
  • சிவராமன் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூர் இவரது சொந்த ஊர். இவர் ஆரம்பக் கல்வியை எர்ணாகுளத்தில் பயின்றார்.
  • பின்னர் தம் சொந்த ஊரான ஆம்பூரில் குடிபெயர்ந்து, உயர்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது, அப்போது மகாத்மா காந்தி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
  • மகாத்மாவின் அழைப்பை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.
Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank

விருதுகள்:

  • பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்து விடக்கூடாதென்பதற்காக நடுவண் அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் ஆகியவற்றை ஏற்க மறுத்து விட்டார். ஆனால், திருக்கோவிலூரில் ‘கபிலர் விருதை’யும், பத்திரிக்கைப் பணியை பாராட்டி அளிக்கப்பட்ட பி.டி.கோயங்கோ (1988) விருதையும், அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற விருதையும் (நிறுவியவர் வா.செ.குழந்தைசாமி) ஏற்றுக் கொண்டார்.
  • இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் ஆக்கப் பணி விருதைப் பெற்றுள்ளார்.

படைப்புகள்:

  • சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம்
  • ரஷ்யப்புரட்சி 17 ஆண்டு அனுபவம்
  • இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி
  • அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்
  • சுதந்திரப் போராட்ட வரலாறு

இறப்பு: மார்ச் 1, 2001

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!