முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 02

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 02

சரோஜினி நாயுடு நினைவு தினம் 

  • சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தவர்.
  • இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.
  • இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
  •  இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.
  • 1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.
Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank
  • பிறப்பிடம்ஹைதராபாத்
  • இறப்பு: மார்ச் 2, 1949
  • நாட்டுரிமை: இந்தியா

ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்த நாள்

  • ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர்.
  • இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர்.
  • இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
  • உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.
  • பிறப்பு : 02.03.1896
  • பிறப்பிடம்: ராஜவல்லிபுரம்
  • இறப்பு25.04.1961

படைப்புகள்

  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • தமிழ்வீரம்
  • தமிழ்விருந்து
  • வேலும்வில்லும்
  • பாரதியார் இன்கவித்திரட்டு

குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள்

  • குன்னக்குடி வைத்தியநாதன் மார்ச் 2, 1935 அன்று பிறந்தவர்.
  • தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார்.
  • குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார்.
  • கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
  • இறப்பு:  செப்டம்பர் 8, 2008

விருதுகள்

  • 1989 – இசைப்பேரறிஞர் விருது
  • 1993 – சங்கீத நாடக அகாதமி விருது
  • கலைமாமணி விருது; வழங்கியது: தமிழக அரசு

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!