முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-04

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-04

ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்
  • இனக்கலவரம், மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான்.
  • போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன.இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர்.
  • ஐ.நா.வின் முடிவுப்படி 1984ம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

. வே சுப்பிரமணிய ஐயர் நினைவு தினம்

பிறப்பு:

  • ஏப்ரல் 2, 1881ல் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
  • தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
  • கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.
  • 1909ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர்.
  • தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார்.
  • வ.வே.சு. தமது  கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார்.
  • 1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார்.
  • 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார்.
  • தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

நூல்கள்:

  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார்.இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
  • இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
  • கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.

இறப்பு:

  • ஜூன் 4, 1925ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1996 – ஐரோப்பாவின் ஆரியான் 5 ஏவுகலம் ஏவப்பட்டு 37 செக்கன்களில் வெடித்துச் சிதறியது.
  • 2010 – ஸ்பேஸ் எக்சு பால்கன்9 முதலாவது ஏவுகலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!