முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-03

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-03

மு.கருணாநிதி பிறந்த தினம்

பிறப்பு:

  •  ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் பிறந்தார்.

இயற்பெயர்: தட்சிணாமூர்த்தி

By https://silverscreen.in [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], via Wikimedia Commons

சிறப்பு:

  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார்.
  • 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார்.
  • மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
  • கருணாநிதி தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார்.
  • இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார் பின் அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருபெற்றது.
  • 1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • அக்டோபர் 13, 1957 நாளை இந்தி எதிர்ப்பு நாளாக மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.
  • 1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
  • மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது.

நூல்கள்:

  • குறளோவியம்
  • நெஞ்சுக்கு நீதி
  • தென்பாண்டி சிங்கம்
  • இனியவை இருபது
  • திருக்குறள் உரை
By Athiyamaan_meets_Dr.Karunanidhi_regarding_inner_reservation_for_Arunthathiyar.jpg: ADHIYAMAANderivative work: BishkekRocks [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0) or GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html)], via Wikimedia Commons

விருதுகள்:

  • உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக 2009ம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
  • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழத்தின் ராஜ ராஜன் விருதினை தென்பாண்டி சிங்கம் என்ற புத்தகத்திற்காக பெற்றார்.

நிகழ்வுகள்

  • 1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
  • 1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

பிறப்புகள்:

  • 1931 – ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் 18வது அரசுத்தலைவர்.
  • 1873 – ஒட்டோ லோவி நோபல் பரிசு பெற்ற செருமானிய அமெரிக்க மருந்தியலாளர், உயிரியலாளர்.

இறப்புகள்

  • 1989 – ரூஃகூல்லா மூசவி கொமெய்னி ஈரானின் 1வது அரசுத்தலைவர்,ஆன்மிகத் தலைவர்.
  • 1990 – ராபர்ட் நாய்சு இன்டெல் நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க தொழிலதிபர், இயற்பியலாளர்.
  • 2011 – பஜன்லால் அரியாணாவின் 6வது முதலைமைச்சர்.
  • 1977 – ஆர்ச்சிபால்ட் ஹில் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!