முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-27

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-27

ஹெலன் கெல்லர் பிறந்த தினம் 

பிறப்பு:

  • ஜூன் 27, 1880ல் அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் பிறந்தார்.
By The Century Magazine (Image acquired from Google Books.) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • புகழ்பெற்ற எழுத்தாளராகவும்,பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார்.
  • இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார்.
  • ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியர் ஆவார்.
  • பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
  • கெல்லர் 1904ம் ஆண்டு தனது 24வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.
  • 1903ல் ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.
  • 1915ம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் என்பவருடன் இணைந்து ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு (HKI) ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது.
  • 1920ம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார்.
  • 1964 செப்டம்பர் 14ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி.தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார்.
  • இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும்.
  • 1965ல் கெல்லர்  நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2009 அக்டோபர் 7ல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
By Charles Milton Bell (Popular Science Monthly Volume 63) [Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • ஜூன் 1, 1968ல் இறந்தார்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூன் 27, 1838ல் பிறந்தார்.
See page for author [Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு வங்காள எழுத்தாளர்,கவிஞர்,இதழியலாளர் ஆவார்.
  • இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது.
  • இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார்.
  • இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
  • பிபின் சந்திர பால் 1906 ஆகஸ்டு மாதம் ஒரு தேசிய இதழைத் தொடங்கிய போது அவ்விதழுக்கு வந்தே மாதரம் எனப்பெயரிட்டார். இது சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் தாக்கத்தால் வைத்த பெயராகும்.
  • லாலா லஜபதி ராய் தனது இதழுக்கும் இப்பெயரினையே சூட்டினார்.

நூல்கள்:

  • இவர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் துர்கேஷ் நந்தனி 1865ம் வருடம் வெளியானது.
  • கபால குந்தளம்(1866)
  • மிர்ணாளினி
  • தேவி சௌதாரிணி
  • ஆனந்த மடம்
  • அரசியல், பொருளாதாரம், சமுகம், மதம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • ஏப்ரல் 8, 1894ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினினிஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
  • 1982 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
  • 1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!