முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 25

0

உலக வெண்புள்ளி தினம்

(World Vitiligo Day)

  • வெண்புள்ளி என்பது ஒரு தொற்றுநோயல்ல
  • ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பால் மெலானின் என்னும் கருப்புநிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது
  • இது சிறியவர்முதல் பெரியவர்வரை யாரை வேண்டுமானாலும் தாக்கும்.
  • இதனை வெண்குட்டம் எனக் கூறுவது முற்றிலும் தவறுஇது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 2003 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

மாலுமிகள் தினம்

(Day of the Seafarer)

உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறதுஇதற்கு மாலுமிகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.

  • ஐ.நா வின் கடல் சார் அமைப்பான (International Maritime Organization) கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 25 ஆம் தேதியை மாலுமிகள் தினமகா அறிவித்து கொண்டாடி வருகிறது.
  • இந்தியக் கடற்படை என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவு.
  • 2013-2014 காலகட்டத்தில் இதில் ஏறத்தாழ இலட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.
  • இவர்களில் பாதுகாப்பு படையை சேராதவர்கள் 43,000, அதிகாரிகள் 8,700, கடற்படையினர் 50,000 , 2008, நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து “சாகர் ப்ரஹரி பல்” என்ற அமைப்பை உருவாக்கி அதில் 1,000 வீரர்களும், 80 விரைவு தாக்குதல் கலன்களும் இருக்கும் என இந்திய அரசு நாடாளுமன்றத்தில் யூலை 2009 தெரிவித்தது.

வி. பி. சிங் பிறந்த நாள்

 (ஜூன் 25 1931 – நவம்பர் 27, 2008)

விஸ்வநாத் பிரதாப் சிங் இந்தியக் குடியரசின் 10 ஆவது பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர்.

இளமைகாலம்

  • 1931 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி. பி. சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  • இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா’ சமஸ்தான மன்னர் ஆவார்.
  • அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி. பி. சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.

அரசியல் வாழ்கை

  • 1969 ஆம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
  • 1971இல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
  • 1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.
  • 1980 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 இல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது. இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார்
  • 1984ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார்
  • டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!