முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-22

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-22

டான் பிரவுன் பிறந்த தினம் 

 • டான் பிரவுன் (பிறப்பு ஜூன் 22, 1964) ஒரு அமெரிக்க பரபரப்புக் கதை புனைவு எழுத்தாளர் ஆவார்.
 • 2003 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த விற்பனை புதினமான “தி டாவின்சி கோட்”  புதினத்தை எழுதியதன் மூலம் சிறப்பான புகழ்பெற்றவர்.
 • 40க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது புதினங்கள் 2009 நிலவரப்படி 80 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாய் விற்றுத் தீர்ந்துள்ளன.
 • டான் பிரவுன் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்சயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் பிறந்தார்.
 • பிரவுனின் முதல் மூன்று புதினங்களும் குறைவான வெற்றிகளையே பெற்றன. ஒவ்வொன்றும் 10,000க்கும் குறைவான பிரதிகளே விற்றன. இவரது நான்காவது புதினமான தி டாவின்சி கோட் மிகச் சிறப்பாய் விற்பனையானது.
 • 2003 இல் புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
 • 2004 ஆம் ஆண்டில் இவரது நான்கு புதினங்களுமே ஒரே வாரத்தில் நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருந்தன.
 • 2005 ஆம் ஆண்டில், டைம் இதழ் வெளியிட்ட அந்த ஆண்டின் 100 மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் அவருக்கு இடம் கிடைத்தது.
 • போர்ப்ஸ் இதழ் 2005 இதழில் வெளியிட்ட “பிரபலங்கள் 100” பட்டியலில் பிரவுனுக்கு 12வது இடம் கிட்டியது.
 • டாவின்சி கோட் விற்பனை மூலமான அவரது வருவாய் 250 மில்லியன் டாலர் என தி டைம்ஸ் மதிப்பிட்டது.

புதினங்கள்

 • டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் , 1998
 • ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் , 2000
 • டிஸப்ஷன் பாயிண்ட் , 2001
 • தி டாவின்சி கோட் , 2003
 • தி லாஸ்ட் சிம்பல் , 2009

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here