முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 19

0

முக்கியமான நிகழ்வுகள்

உலக சிக்கில்  செல் நாள்

  • சிக்கில்  செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி உலக சிக்கில் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. சிக்கில்  செல் நோய் (எஸ்சிடி) என்பது  மரபு  மரபணு ரீதியான ஹீமோகுளோபினின்(சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்) குறைபாடு ஆகும்.
  • இந்த குறைபாடானது சிறிய இரத்த நாளங்களில்  தடுப்புகளை  ஏற்படுத்தி உடலின் சில பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டுசெல்வது  மற்றும்  இரத்த ஓட்டத்தை குறைக்கிறது.
ப்லெய்ஸ் பாஸ்கல் பிறந்த நாள்

பிறந்த நாள்:

அவர் ஜூன் 19, 1623 இல் பிறந்தார்.

Blaise Pascal

  • அவர் ஒரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியல், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் மற்றும் கத்தோலிக்க இறையியலாளர் ஆவார். பாஸ்கலின் ஆரம்பகால வேலை இயற்கை மற்றும் பயன்பாட்டு விஞ்ஞானங்களில் இருந்தது, அங்கு அவர் திரவங்களைப் பற்றிய ஆய்வுக்கு முக்கிய பங்களிப்புகளை செய்தார், மேலும் எவாஞ்சலிஸ்டா டொரிசெல்லியின் கண்டுபிடிப்புகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தார்.
  • பாஸ்கல் முக்கிய கணிதவியலாளராக இருந்தார். அவர் 16 வயதில் திட்டவட்டமான வடிவியல் பற்றிய ஒரு முக்கிய ஆய்வு எழுதினார்.

இறப்பு:

அவர் ஆகஸ்ட் 16, 1962 அன்று தனது 39 வயதில் இறந்தார்.

வில்லியம் கோல்டிங் நினைவு தினம்

பிறந்த நாள்:

அவர் செப்டம்பர் 19, 1911 அன்று பிறந்தார்.William Golding

  • அவர் ஒரு பிரிட்டிஷ் நாவலாசிரியர், நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் இருந்தார். அவர் எழுதிய ‘Lord of the Flies’ நாவலுக்காக பெரிதும் அறியப்பட்டார் அவர் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்றார்.
  • கோல்ட்னிங் ராயல் சொசைட்டி ஆப் லிட்ரேச்சரில் ஒருவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் “1945 முதல் 50 பெரிய பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் பட்டியலில் கோலடிங்கிற்கு மூன்றாவது இடத்தை அளித்தது.

இறப்பு:

அவர் ஜூன் 19, 1993 அன்று தனது 81 வயதில் இறந்தார்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here