முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 16

0
முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 16

உலக கடல் ஆமை தினம்

  • உலக கடல் ஆமை தினம் ஜூன் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. கடல் ஆமைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன மற்றும் அவை ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியமானவை, கடல் சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் ஆமைகளின்  ஏழு வகைகளும் இனப்பெருக்கம் மற்றும் உயிர்வாழ்வதற்காக  பெருங்கடல்கள் மற்றும் நிலங்களின் ஆரோக்கியத்தை சார்ந்து உள்ளன .
  • காலநிலை மாற்றம்,மாசுபாடு, வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் ஆகியவை அவைகளை  அச்சுறுத்தும் நிலையில் உள்ளன , பல வகையான கடல் ஆமைகள் அழிவுக்கு நேராக தள்ளப்பட்டுவருகின்றன .

வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கான சர்வதேச தினம்

  • வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கான சர்வதேச தினம்  (ஐ.டி.எஃப்.ஆர்) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (A / RES / 72/281) இந்த தீர்மானத்தின் படி ஏற்றுக்கொண்டு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அனுசரிப்பு ஆகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 800 மில்லியனுக்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், தங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் 200 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.

சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம்

பிறப்பு : 

  • தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், நவம்பர் 5, 1870 அன்று பிறந்தவர்.

சிறப்புக்கள் :

  • இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.
  • தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்.
  • 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர்.
  • இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார்.
  • இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
  • இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.
  • அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.
  • அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார்.
  • சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.
  • புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.

இறப்பு

  • இவர் ஜூன் 16, 1925 அன்று இறந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!