முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 01

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 01

உலக பெற்றோர் தினம்

By https://pixabay.com/fr/users/ClkerFreeVectorImages-3736/ [CC0 or CC0], via Wikimedia Commons
 • உலக பெற்றோர் தினம் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
 • பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர்.
 • பெற்றோர்கள் குழந்தை என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர்.
 • உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.

சர்வதேச குழந்தைகள் தினம்

By RafikiAfricaMinistries [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons
 • சர்வதேச குழந்தைகள் தினம் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
 • உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது.
 • உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன.
 • இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் 1ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.
 • குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் அவர்களின் நலன்களை காப்பதற்காக சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஹெலன் கெல்லர் நினைவு தினம்

பிறப்பு:

 • ஜூன் 27, 1880ல் அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் பிறந்தார்.
By Whitman, Chelsea, Mass. [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • புகழ்பெற்ற எழுத்தாளராகவும்,பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார்.
 • இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார்.
 • ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியர் ஆவார்.
 • பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
 • கெல்லர் 1904ம் ஆண்டு தனது 24வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.
 • 1903ல் ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.
 • 1915ம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் என்பவருடன் இணைந்து ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு(HKI) ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது.
 • 1920ம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார்.
 • 1964 செப்டம்பர் 14ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி.தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார்.
 • இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும்.
 • 1965ல் கெல்லர்  நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 2009 அக்டோபர் 7ல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
See page for author [Public domain], via Wikimedia Commons

இறப்பு:

 • ஜூன் 1, 1968ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!