முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 09

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 09

கிரண் பேடி பிறந்த தினம் 

கிரண் பேடி (பிறப்பு: 9 ஜூன் 1949) ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.

  • இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார்.
  • 1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவர் இவர்.
  • 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருதுவிருது பெற ஏதுவாய் இருந்தது.

  • 2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார்.
  • 2011இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார்.
  • இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015 இல் இணைந்தார்.
  • 2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப்பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.

ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த தினம் 

(ரயில் தந்தை)  (9 ஜூன் 1781 – ஆகஸ்ட் 12, 1848)

  • கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.
  • தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப் படுபவர்.

  • நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர்.
  • 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ)நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது. அது “ஸ்டீபன்சன் பாதை” என அழைக்கப்படுகிறது.

மறைவு

  • 1848-ல் எலென் கிரிகோரி என்ற பெண்ணை இவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
  • இவருக்கு 67 வயதான போது நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

உலக பொம்மை தினம்

 

  • இந்த நாளில் பார்பி பொம்மைகள், கரடி பொம்மைகள், கார்ட்டூன் பாத்திர பொம்மைகள், சாதனை மனிதர்கள் உள்ளிட்ட பிரபலமான பொம்மைகள் அதிகம் விற்பனையாகும்.
  • பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகளுக்கும் பொம்மைகளைப் பரிசளிப்பார்கள்.

  • குழந்தைகளும் தங்களது பொம்மைகள் சேகரிப்பில் ஒரு சிலவற்றைப் பொம்மைகள் இல்லாத குழந்தைகளுக்குப் பரிசளித்து மகிழ்வார்கள்.
  • இந்த உலக பொம்மை தினம் 1986-ம் ஆண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!