முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 08

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 08

உலக கடல் தினம்

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது.

  • Theme : “Gender and the Ocean”
  • இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது.
  • பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.
  • அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நோக்கம்

  • உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், ‘உலக பெருங்கடல்கள் நாள்’ ஆண்டுதோறும் அவதானிக்கப்படுகிறது.
  • கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது.
  • உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

உலக மூளை கட்டித் தினம்

(World Brain Tumor Day)

உலக மூளை கட்டித் தினம் ஜூன் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

  • மூளைக் கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • இவ்வகையான வளர்ச்சி, அசாதாராணமாக ஏற்படும் கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் ஏற்படுகிறது.
  • அது புற்றுக்கட்டியாகவோ (வீரியம் மிக்க) அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ (தீங்கற்ற) இருக்கலாம்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!