முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 28

0
115

ராபர்ட் ஹூக்

பிறப்பு

  • ராபர்ட் ஹூக் (Robert Hooke) ஜூலை 28 ம் நாள் 1635 ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.

கண்டுபிடிப்புகள்

  • இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.
  • ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர்.
  • அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார்.
  • முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே.
  • 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார்.
  • முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார்.
  • ஹூக் விதியை வரையறுத்தார்.
  • 1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார்.
  • செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.

இறப்பு

  • மார்ச் 3,1703

சிறப்பு நாள்:

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here