முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-23

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-23

வரலாற்றில் இன்று

  • 1995 – ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
  • 1999 – சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.
  • 1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
  • 2005 – எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 – ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

பிறப்பு

கிரகாம் கூச்

  • கிரகாம் கூச் (Graham Gooch, பிறப்பு: சூலை 23, 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.
  • இவர் 118 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 581 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 614 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
  • இவர் 1975 – 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

இறப்பு

  • வால்டெமர் பவுல்சன் (Valdemar Poulsen, 23 நவம்பர் 1869 – 23 சூலை 1942) ஒரு டேனிசிய (டென்மார்க்கைச் சேர்ந்தவர்) பொறியியலாளர்.
  • இவர் இரும்பிக் கம்பிகளில் முதன்முதலாக 1899 இல் ஒலிப்பதிவு செய்து காட்டியவர்.
  • 1900 இல் பாரிசில் நிகழ்ந்த உலகக் கண்காட்சியில் பவுல்சன் தன் ஒலிப்பதிவியைக் காட்டியபொழுது ஆத்திரியப் பேரரசர் ஃவிரான்சு யோசஃவு (Franz Josef) அவருடைய குரலைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றார். இதுவே உலகில் மிகப் பழையதாக செய்த, இன்று கிடைக்கும் ஒலிப்பதிவாகும்.
  • இவர் சூலை 23, 1942 இல் இயற்கை எய்தினார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!