முக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை 20

நிகழ்வுகள்

 • 1976 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தாய்லாந்தில் இருந்து முற்றாக வெளியேறினர்.
 • 1976 – வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.
 • 1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
 • 1980 – இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.
 • 1982 – ஐரியக் குடியரசு இராணுவத்தினரினால் லண்டனில் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொது மக்கள் படுகாயமடைந்தனர்.
 • 1989 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
 • 1996 – ஸ்பெயினில் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

சர்வதேச செஸ் தினம்

 • 1924ம் ஆண்டு ஜூலை 20 இல் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 20 அன்று  சர்வதேச செஸ் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஸ் தினமாக கொண்டாடும் யோசனையை  யுனெஸ்கோவால் முன்மொழியப்பட்டு 1966 முதல் கொண்டாடப்படுகிறது.

பிறப்பு

கிரிகோர் மெண்டல்

 • கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி.
 • இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.
 • மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார்.
 • அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்.

இறப்பு

 • லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.
 • இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். 20-ஆம் நூற்றாண்டின் பரப்பிசை பண்பாடு கால குறி உருவமாகப் பார்க்கப்பட்டார்.

சிறப்பு நாள்

 • பன்னாட்டு நட்பு நாள் (அர்கெந்தீனா, பிரேசில்)
 • விடுதலை நாள் (கொலம்பியா, 1810)
 • மர நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு)
 • அனைத்துலக சதுரங்க நாள்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here