முக்கியமான நிகழ்வுகள் ஜூலை 19

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 19

நிகழ்வுகள்

  • 1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
  • 1980 – கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மாஸ்கோவில் ஆரம்பமாயின.
  • 1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.
  • 1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.
  • 1989 – அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.
  • 1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் இறந்தனர்.
  • 1997 – ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.

பிறப்பு

ரோசலின் யாலோ

  • ரோசலின் சுஸ்மன் யாலோ (Rosalyn Sussman Yalow, சூலை 19, 1921 – மே 30, 2011), ஓர் அமெரிக்க மருத்துவ இயற்பியலாளர் ஆவார்.
  • இவர் கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக 1977 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவர்.
  • கெர்டி கோரிக்குப் பின்னர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது அமெரிக்கப் பெண் இவராவார்.

இறப்பு

விபுலாநந்தர்

  • சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர்.
  • இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.
  • யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார்.
  • 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார்.

சிறப்பு நாள்

  • மாவீரர் நாள் (மியான்மர்)
  • விடுதலை நாள் (நிக்கராகுவா)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!