முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-16

0

அருணா ஆசஃப் அலி பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூலை 16, 1909ல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர். உப்பு சத்தியாக்கிரகத்தின் போது சிறை சென்றவர்.
  • 1942ம் ஆண்டு வெளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார்.
  • விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் பங்காற்றி உள்ளார்.
  • 1958ம் ஆண்டு டெல்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்த காலகட்டத்தில் நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் மற்றும் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
  • 1964ம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.இருப்பினும் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை.

விருதுகள்:

  • அருணா ஆசஃப் அலிக்கு 1997ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • பத்ம விபூஷன் விருது – 1992
  • அருணா ஆசாப் அலிக்கு 1964ம் ஆண்டுக்கான சர்வதேச லெனின் அமைதி பரிசு வழங்கப்பட்டது.
  • 1991ம் ஆண்டில் சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது வழங்கப்பட்டது.
  • 1998ம் ஆண்டில் அவரது நினைவாக ஸ்டாம்ப் வழங்கப்பட்டது.

இறப்பு:

  • ஜூலை 29, 1996ல் இறந்தார்.

பிரிட்ஸ் ஜெர்னிகி பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூலை 16, 1888ல் நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் நகரில் பிறந்தார்.
By Nobel foundation [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • டச்சு இயற்பியலாளர்.இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி எனும் கருவியை கண்டுபிடித்தது இவரின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.
  • 1908ம் ஆண்டில் பால்மிளிர்வு குறித்த விரிவான ஆய்வுக்காக டச்சு அறிவியல் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் அறிவித்தது.
  • தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட பெட்டி(கேமரா),சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார்.
  • நிறமாலை வரிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதோடு அதன் அடிப்படையில் ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ கருவியை மேம்படுத்தினார்.
  • 1933ல் வேஜெனிங்கன் நகரில் நடந்த இயற்பியல் மருத்துவ மாநாட்டில், ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ தொழில்நுட்பத்தை விளக்கிக் கூறிய அவர், அதே முறையை ஒளியியல் வில்லைகளின் (Convex lens) திறனை சோதிக்கவும் பயன்படுத்தினார்.
  • மேலும் தன் மாணவர்களுடன் இணைந்து லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.
  • லண்டன் அரச கழகத்தின்  ராம்ஃபோர்ட் பதக்கம், நெதர்லாந்து கலை, அறிவியலுக்கான ராயல் அகாடமி,ராயல் சொசைட்டி உள்ளிட்ட பல அமைப்புகளின் உறுப்பினராக இருந்துள்ளார்.
  • “பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்” எனும் ஒளி மாறுபாடு நுண்ணோக்கியையும் கண்டறிந்து அதற்காக 1953ல் இயற்பியல் நோபல் பரிசையும் வென்றார்.

இறப்பு:

  • மார்ச் 10, 1966ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.
  • 1969 – அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கிய முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
  • 1994 – “ஷூமேக்கர்-லெவி 9” என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.
  • 2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயில் கருகி இறந்தனர்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!