முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-14

0

வா.செ.குழந்தைசாமி பிறந்த தினம்

பிறப்பு:

 • ஜூலை14, 1929ல் கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையத்தில் பிறந்தார்.

சிறப்பு:

 • இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞரும்,கல்வியாளர்,கவிஞர்,எழுத்தாளர் ஆவார்.
 • தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர்.
 • நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
 • பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
 • இவர் குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
 • இவைதவிர ஆங்கிலத்திலும், தமிழிலும், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

விருதுகள்:

 • ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999ம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார்.
 • தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளது.
 • பத்மஸ்ரீ விருது – 1992
 • பத்மபூசண் விருது – 2002
 • இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980ம் ஆண்டு கௌரவ முனைவர் பட்டமளித்தது.

இறப்பு:

 • டிசம்பர் 10, 2016ல் இறந்தார்.

எம். எஸ். விஸ்வநாதன் நினைவு தினம்

பிறப்பு:

 • 24 ஜூன் 1928ல் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகிலுள்ள  எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
By Kumarrajendran at en.wikipedia [Public domain], from Wikimedia Commons

சிறப்புகள்:

 • தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார்.
 • தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் தெலுங்கு இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
 • இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.
 • கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்

 • இசைப்பேரறிஞர் விருது – 2003
 • கலைமாமணி விருது
 • மதிப்புறு முனைவர் பட்டங்கள் – 2
 • 1963ம் ஆண்டு ஜூன் ன் மாதம் 16ம் தேதி  சிவாஜி கணேசனால் விஸ்வநாதன் இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
By Kannanshanmugam,shanmugam studio,Kollam [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons

இறப்பு:

 • 14 ஜூலை 2015ல் இறந்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here