முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -12

0

மலாலா யூசப்சையி பிறந்த தினம் 

  • மலாலா யூசப்சையி என்பவர் ஜூலை-12, 1997 அன்று பிறந்தார்.
  • பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார்.
  • இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார்.
  • இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார்.
  • 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால்எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.

விருதுகள்:

  • பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
  • 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

சுந்தர் பிச்சை பிறந்த தினம் 

  • பிறப்பு: ஜூலை 12, 1972.
  • சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன், இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார்.
  • இவரை கூகுளின் அடுத்த முதன்மை செயல் அலுவலராக ஆகஸ்ட் 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது.

பணி:

  • சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார்.
  • கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார்.

ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த தினம் 

  • ஜார்ஜ் ஈஸ்ட்மன் (George Eastman)ஜூலை 12, 1854 அன்று பிறந்தார்.
  • ஈஸ்ட்மன் கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார்.
  • ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.
  • ஈஸ்ட்மன் தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார்.
  • 1888 இல் “கோடாக்” என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.

இறப்பு: மார்ச் 14, 1932.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!