முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -11

0

உலக மக்கள் தொகை நாள் 

  • உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • உலக மக்கள்தொகை வளர்ச்சியானது கிபி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது.
  • 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960 இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது.
  • மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது.
  • 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதகுருவான டி. ஆர். மால்தஸ், தனது ‘மால்தஸ்சின் மக்கள் தொகைக் கோட்பாட்டில்’ அதிகரிக்கின்ற மக்கள் பெருக்கத்தினால் மக்கள் உணவின்றி அவதிப்படுவர் என்றார். அன்று அவரால் வெளியிடப்பட்ட கருத்து, உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள இன்றைய சூழ்நிலையில் உலக நாடுகள் பலவற்றால் நினைவுகூரப்படுகின்றது.

தியோடர் ஹரோல்ட் மைமான் பிறந்த ஆண்டு

பிறப்பு: தியோடோர் ஹரோல்ட் “டெட்” மைமான் ஜூலை 11, 1927 இல் பிறந்தார்.

  • தியோடோர் ஆரோல்டு “டெட்” மைமான்அமெரிக்க இயற்பியலாளர். இவர் 1960 இல் சீரொளி (லேசர்) யைக் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டியவர்.
  • மைமானின் சீரொளிக் கருவியை முனைவர் ரால்ஃவ் எல். அட்சின்சன் ( Dr. Ralph L. Hutcheson) வளர்த்துத் தந்த சிகப்புக்கல் அல்லது கெம்பு என்னும் படிகத்தைக் கொண்டு உருவாக்கி மே 16, 1960 இல் வெற்றிகரமாக இயக்கிப் புதுமை படைத்தார்.
  • ஹியூஸ் ஆய்வகத்தை விட்டுச் சென்றபின் குவாண்ட்ரான் என்னும் நிறுவனத்தில் சேர்ந்து அங்கு லேசர் மேம்பாட்டுப்பணிகளைச் செய்து வந்தார். 1962 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு முழுச்சொந்தமான, புதிதாக நிறுவப்பட்ட, கோராட் கார்ப்பொரேசனின் (Korad Corporation) தலைவராக (president) பொறுப்பேற்றார்.
  • இவருடைய லேசர் கண்டுபிடிப்புக்காக இருமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் எனினும் இவர் அப்பரிசைப் பெறவில்லை

இறப்பு: மே 5, 2007 இல் அவர் இறந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!