முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-01

0

தேசிய மருத்துவர்கள் தினம்

  • சமூகம் மற்றும் தனி மனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம்.
  • பிடன் சந்திர ராய்(Bidhan Chandra Roy) பீகார் மாநிலம் பாட்னாவில் 1882ம் ஆண்டு ஜூலை 1ல் பிறந்தார்.மருத்துவம் பயின்ற பிறகு பீகார் மற்றும் மேற்கு வங்க ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.
  • 14 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராக இருந்தார்.அப்போது தினமும் ஒரு மணி நேரம் ஏழைகளுக்கு மருத்துவம் செய்தார்.
  • நாட்டிலேயே சிறந்த மருத்துவர் எனக் குறிப்பிடும் வகையில் ஏழைகளுக்கு மருத்துவ சேவை புரிந்தார்.
  • இவரின் சேவையைப் பாராட்டி 1961ம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
  • இவர் 1962ம் ஆண்டு ஜூலை 1ல் இறந்தார்.இவரின் பிறப்பும், இறப்பும் ஜூலை 1 ஆம் தேதி வருகிறது.
  • இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பி.சி. ராயின் நினைவைப் போற்றும் வகையில் ஜூலை 1ம் தேதியை தேசிய மருத்துவர் தினமாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது.

கல்பனா சாவ்லா பிறந்த தினம் 

பிறப்பு

  • 1961 ஜூலை 1ல் பிறந்தார்.
By NASA [Public domain], via Wikimedia Commons
சிறப்பு:

  • சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.
  • கல்பனா மார்ச் 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை.
  • கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார்.

விருதுகள்:

மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:

  • அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம்
  • நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்
  • நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம்
  • இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 லிருந்து கல்பனா சாவ்லா விருது தருகிறது.

கிரகத்தின் பெயர்:

  • ஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும், இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர்.

இறப்பு:

  • 2003 பிப்ரவரி 1ல் இறந்தார்.

சந்திரசேகர் பிறந்த தினம் 

பிறப்பு

  • 1961 ஜூலை 1ல் உத்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பால்லியா மாவட்டத்தில் பிறந்தார்.
By User:Sunilkhakhar [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • இந்தியாவின் 8வது பிரதமர்.
  • 1955-1956ல் அவர் மாநில பொது செயலாளராக பதவியேற்றார்.
  • 1962ம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சந்திரசேகர் “இளம் துருக்கியர்” என்றழைக்கக்கப்பட்டார்.
  • 1964ல் காங்கிரசில் சேர்ந்தார்.1962லிருந்து 1967 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
  • ஜனதா தளத்தில் பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) உருவாக்கி இவர் 1990 நவம்பர் 10ல் எட்டாவது இந்திய பிரதமர் ஆனார்.
  • சேகர் பாராளுமன்ற மரபுகளை அனுசரித்து நடந்ததால் 1995ல் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதினை பெற்று கவுரவிக்கப்பட்டார்.
  • 1977ம் ஆண்டில் தொடங்கி அவர் மக்களவை தேர்தலில் எட்டு முறை வெற்றி பெற்றார்.

இறப்பு:

  • ஜூலை 8, 2007ல் இறந்தார்(80 வயது).

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!