முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 9

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 9

வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

 • வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 • இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
 • மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 • ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

 • வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian,NRI) எனப்படுவோர் இந்தியாவில் இல்லாது வேறொரு நாட்டில் புலம்பெயர்ந்த இந்திய குடியினர்ஆவர்.
 • இவர்கள் இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள். இந்திய அரசுவெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும் அத்தகைய பெற்றோர்களுக்கு பிறந்தவர்களையும் இந்திய வம்சாவளி நபர்(Person of Indian origin, PIO) என்று வகைப்படுத்துகிறது.
 • இவர்களுக்கு கடவுச்சீட்டை ஒத்த பிஐஓ அட்டை வழங்கப்படுகிறது.

நிகழ்வுகள்

 • 1915 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
 • 1916 – முதலாம் உலகப் போர்: ஒட்டோமான்களின் வெற்றியுடன் கலிப்பொலி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
 • 1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
 • 1951 – ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
 • 1964 – மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

தேசிய நிலையான மின்சார தினம்

ஜனவரி 9 ஆம் தேதி தேசிய நிலையான மின்சார தினம் ஆக கொண்டாடப்படுகிறது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here