முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 7

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 7

சடாகோ சசாகி பிறந்த தினம் 

(7 ஜனவரி, 1943 – 25அக்டோபர், 1955)

ஒருஜப்பானிய சிறுமி, ஹிரோசிமாவில் 1945, ஆகஸ்ட் 6 அன்று அணுகுண்டு வீசப்பட்ட போது அவளிற்கு இரண்டு வயது, அவளது வீடு அணுகுண்டு வீசப்பட்ட மிசசா பாலத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது.

 • சடாகோ அணுகுண்டு வெடிப்பு நிகழும் போது வீட்டிலேயே இருந்தாள், இவ்வெடிப்பு தரையிலிருந்து 2 கிலோமீட்டரில் நிகழ்ந்தது, அதன் போது யன்னலூடாக வெளியே வீசப்பட்டாள். மகள் உயிருடன் இருப்பதை கண்டறிந்தார் சடாகோவின் தாய்.
 • 1954 நவம்பரில் அவளது காதுகளின் பின்னால் வீக்கம் உருவானது, 1955 சனவரியில் கால்களில் ஊதாப்புள்ளிகள் உருவாகியது. பின்னர் அது குருதிப்புற்றுநோய் என அறியப்பட்டது.
 • அணுகுண்டு வெடித்து சில ஆண்டுகளிற்கு பின் குருதிப்புற்றுநோய் குறிப்பாக குழந்தைகளிடத்தில் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. 1950களின் தொடக்கத்தில் இது அணுக்கதிர் வீச்சினாலேயே ஏற்படுகிறது என்பது அறியப்பட்டது.

மறைவு

 • 1955 ஆகஸ்டு 3 ஆம் தேதி சகாடோவின் உயிர்நண்பியான சிசூகோ கமமோடோ மருத்துவமனைக்கு பார்க்க வந்து ஒரு தங்கநிறமான தாளினை சதுரமாக வெட்டி அதை காகித கொக்காக மடித்தாள், யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் எனும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள், இதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கனாள்
 • இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.
 • அவளது குடும்பத்தினர் அவளைச் சூழ்ந்திருக்க ஒக்டோபர் 25, 1955 காலையில் 12 ஆவது வயதில் உயிரிழந்தாள்.

கலிலீயோ வியாழனின் துணைக்கோள்களை கண்டறிந்த தினம்

 • கலிலியின் நிலவுகள் என்பது ஜனவரி 1610ஆம் ஆண்டில் கலிலியோகலிலியால் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நிலவுகள் ஆகும்.
 • வியாழனின் 63 நிலவுகளில் இந்த நான்கு நிலவுகளே பெரியவையும், சாதாரண தொலை நோக்கியாலும் அவதானிக்கப்படக்கூடியவை ஆகும்.
 • இவை ஐஓ, யுரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ ஆகும்
 • இவை அனைத்தும் குறுங்கோள்களைவிடவும் பெரியவை என்பது குறிப்பிடத்தக்கது.

 • குறிப்பாக கனிமிடு ஆனது புதன் கோளை விடவும் பெரியதாகும்,
 • இதுவே ஞாயிற்றுத் தொகுதியிலேயே மிகப் பெரிய துணைக்கோளாகும்.
 • கலிலியோ தானே உருவாக்கிய தொலைநோக்கியால் இவற்றைக் கண்டுபிடித்தார்.
 1. ஐஓ (சந்திரன்) வியாழன் I
 2. யுரோப்பா வியாழன் II
 3. கனிமீடு வியாழன் III
 4. காலிஸ்டோ வியாழன் IV

 • கலீலியோ கலிலி (Galileo Galilei)  (15 பிப்ரவரி 1564– 8 சனவரி 1642),
 • ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார்.
 • இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார்.
 • கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன  இயற்பியலின் தந்தை”, “நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here