முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 6

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 6

லூயிஸ் பிரெய்ல் நினைவு தினம் 

லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809.ஜனவரி-6, 1852, பிரான்ஸ்)

 • பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.
 • பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

இளமைக்காலம்

 • லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது.
 • பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.

சிறப்புகள்

 • இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும்.
 • இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன.
 • இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தைவெளியிட்டு பெருமைப்படுத்தியது.

பிரெயில் எழுத்து முறை

 • பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும்.
 • பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது.
 • பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.

ஏ. ஆர். ரகுமான் பிறந்த தினம்

 • அல்லா இரக்கா ரகுமான் ((ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம்இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
 • இவர் இந்தி, தமிழ், ஆங்கிலம்போன்ற மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல்என அழைக்கப்படுகிறார்.
 • ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப்பெற்றவர்.
 • இவர் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கை

 • ரகுமான் 1966 ஜனவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். திலீப்குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும்.
 • இசையுலகப் பயணம் 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர்.
 • இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கல்வி

 • டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

நிகழ்வுகள்

 • 1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
 • 1900 – இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 • 1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார்.
 • 1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
 • 1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
 • 1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
 • 1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனவரி 6 கிரிகோரியன் நாட்காட்டியில் ஆண்டின் ஆறாம் நாள். ஆண்டு இறுதி வரை 360 நாட்கள் எஞ்சியுள்ளன (360 ஆண்டுகளில்).

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here