முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 4

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 4

சர்வதேச பிரெயில் தினம்

லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809.ஜனவரி-6, 1852, பிரான்ஸ்)

  • பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.
  • பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

இளமைக்காலம்

  • லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது.
  • பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.

சிறப்புகள்

  • இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும்.
  • இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன.
  • இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தைவெளியிட்டு பெருமைப்படுத்தியது.

ஐசக் நியூட்டன் பிறந்த தினம் 

ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727)

ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவ ஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன்.

இளமைக்காலம்

  • ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

கல்வி

  • நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை.
  • 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில்சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது.
  • நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.

  • 1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார்.
  • 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார்.
  • மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன்.

கண்டுபிடிப்புகள்

  • புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார்.
  • இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார்.
  • கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு.
  • வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.

இறுதிக்காலம்

  • இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் “சர் ஐசக் நியூட்டன்” நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!