முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 30

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 30

தியாகிகள் தினம் (காந்திஜி நினைவு தினம்)

  • தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதாகும்.
  • தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த னவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி நினைவு தினம்

(அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948)

  • இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.
  • சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
  • இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

மறைவு

  • மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால்சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இராமலிங்க அடிகளார் நினைவு தினம்

(அக்டோபர் 5, 1823 –ஜனவரி 30, 1874)

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடியவர் இவர்

  • சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.
  • வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.

பிறப்பு

  • இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார்.

இவருடைய காலத்தில் இருந்தவர்கள்

  • ஆறுமுக நாவலர்
  • மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • காஞ்சிபுரம் சபாபதி முதலியார்

நினைவு அஞ்சல்தலை

  • இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!