முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 3

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 3

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்

பிறப்பு:

  • வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியில் ஜனவரி 03 ஆம் தேதி, 1760ல் பிறந்தார்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.

வாழ்க்கை:

  • ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் – திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

பொம்மு நாயக்கர்:

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

நிகழ்வுகள்:

  • 1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
  • 1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
  • 1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
  • 1995 – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
  • 2015 – நைஜீரியாவின் வடகிழக்கே பாகா நகரை போகோ அராம் போராளிகள் தாக்கி பொதுமக்களைப் படுகொலைசெய்ய ஆரம்பித்தனர். 2,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

சிறப்புகள்:

  • வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” – தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு.
  • கட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இறப்பு:

  • வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் 1779 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!