முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-18

1

குமாரசாமிப் புலவர் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜனவரி 18, 1854 ல் பிறந்தார்.
Kumaran07~enwiki at the English Wikipedia [Public domain, GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html) or CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/)], via Wikimedia Commons

சிறப்பு:

  • இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார்.
  • நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் கற்றுத் தேர்ந்தார். கவி பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்து வதிலும் திறமை பெற்றிருந்ததால், ‘புலவர்’ என்று அழைக்கப்பட்டார்.
  • பன்மொழிப் புலவரும் உறவினருமான நாகநாத பண்டிதரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை விரிவாகக் கற்றதோடு, வடமொழியிலும் புலமை பெற்றார். சமய நூல்களை நமசிவாய தேசிகரிடம் கற்றார்.
  • 1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் புலவரின் திறமைகளைக் கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தினால் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார்.
  • 1909 ஆம் ஆண்டு புலவர் தமிழ்நாடு சென்ற போது தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். மீண்டும் 1914 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசராசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
Kumaran07 [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html) or CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/)], from Wikimedia Commons.

புலவரின் செய்யுள் நூல்கள் சில:

  • வதுளைக் கதிரேசன் சிந்து (1884)
  • மாவையிரட்டை மணிமாலை (1896)
  • மேகதூதக் காரிகை (1896)
  • நீதி நெறி விளக்கம்
  • சிசுபாலசரிதம் (1921)

புலவர் பதிப்பித்த நூல்கள் சில:

  • நான்மணிக்கடிகை (1900)
  • ஆசாரக்கோவை (1900)
  • ஆத்திசூடி வெண்பா (1901)
  • பழமொழி விளக்கம் (1903)

இறப்பு:

  • மார்ச் 23, 1922,ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!