முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 12

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி -12

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்

(ஜனவரி 12, 1863 – சூலை 4, 1902)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).

  • இராமகிருஷ்ணபரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
  • இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
  • 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

வாழ்க்கை:

  • விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.
  • தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
  • இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

துறவறம்:

  • 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர்.
  • பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது.
  • மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும்.
  • தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்

மறைவு:

  • 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

பகவான் தாஸ் பிறந்த தினம் 

(ஜனவரி 12, 1869 – செப்டம்பர் 18, 1958)

  • ஓர் இந்திய இறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
  • பிரித்தானிய இந்தியாவில் நடுவண் சட்டப் பேரவையில் அங்கத்தினராக இருந்தவர்.
  • இந்துத்தானி பண்பாட்டு சமூகத்துடன் இணைந்திருந்த பகவான் தாசு, அரசியல் எதிர்ப்பைத் தெரிவிக்க “கலவரங்களில்” ஈடுபடுவதை கண்டித்தார்.
  • பிரித்தானிய அரசு இந்தியாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டால் பலமுறை ஆங்கிலேய அரசின் கொடுமைகளுக்கு ஆளானார்.

வாழ்க்கை:

  • வாரணாசியில் பிறந்த பகவான் தாஸ் 1894ஆம் ஆண்டில் அன்னி பெசண்ட்டின் பேச்சால் கவரப்பட்டு இறை மெய்யியல் சங்கத்தில் இணைந்தார்.
  • 1895ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரிவின்போது அடையாறு இறை மெய்யியல் சங்கத்தில் சேர்ந்தார்.
  • இந்த சங்கத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு எதிரான குழுவில் செயல்பட்டார்.
  • ஒத்துழையாமை இயக்கத்தின்போது காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்.
  • 1955ஆம் ஆண்டில் இவரது சிறந்த தேசியப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

தேசிய இளைஞர் தினம் 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

  • 1984-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை “தேசிய வாலிபர் தினமாக” அறிவித்தது,
  • அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தே தி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!